தலைப்புச் செய்திகள்

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்

பதுளை மாவட்டம் முழுவதும் 07 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார், ராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கண்டி மாவட்டத்தில் பத்தஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும், உடதும்பரவைச் சேர்ந்த இரண்டு பேரும் மண் சரிவைத் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.