
கடுகண்ணாவ – கணேதென்ன சந்திக்கு அருகில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவில் மேலும் பலர் சிக்கியுள்ளனர்.
மண் சரிவில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டு மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண் சரிவில் சிக்கியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியோரத்திலுள்ள கடை மற்றும் பல வாகனங்கள் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கணேதென்ன பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ள தேநீர் கடை அமைந்துள்ள இடம், வாகன நிறுத்தமொன்றாகும்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



