தலைப்புச் செய்திகள்

தெற்கு லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: நேற்றும் இன்றும் 14 பேர் பலி

தெற்கு லெபனானிலுள்ள அகதிகள் முகாமில் நேற்று நடந்த தாக்குதல்

தெற்கு லெபனானில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர்.

தெற்கு லெபனானிலுள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் மீது, நேற்று (18) இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஸாவின் ரஃபா மற்றும் கான் யூனிஸின் சில பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் – குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர்.

சமீபத்திய போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் 393 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இவற்றில் 279 பேர் கொல்லப்பட்டனர், 652 பேர் காயமடைந்தனர் என்று காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 69,483 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 170,706 பேர் காயமடைந்தனர்.