தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு, சிறப்புக் குழு நியமிக்கப்படும்: அமைச்சர் பிமல்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்படும் என – சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (15) தெரிவித்தார்.

தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு இந்தக் குழு மதிப்பாய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதிலுள்ள சட்டச் சிக்கல்களை தீர்ப்பதற்காக, அனைத்துக் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2026 வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, 10 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.