
வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் (vehicle permits) தமக்குத் தேவையில்லை என்றும், அரச துறையிலுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு அத்தகைய சலுகைகள் நீடிக்கப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேததாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர்; குறைந்த சம்பளம், அதிக வரிகள் மற்றும் படித்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை இல்லாமையினால் இலங்கையில் மூளைச் சலிப்பு அதிகரித்து வருவதாகக் கூறினார்.
கடந்த வாரம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, செலவினங்களைக் கட்டுப்படுத்துவதையும் சமத்துவமின்மையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் நிதி ஒழுக்கக் கட்டமைப்பின் கீழ், யாருக்கும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படாது என்று அறிவித்தார்.
‘அழகான வாழ்க்கையுடன் கூடிய வளமான தேசத்தை’ உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், அவரின் நிர்வாகம் ‘துன்பம் மற்றும் ஆதரவற்ற வாழ்க்கை கொண்ட ஒரு தேசத்தை’ உருவாக்கியுள்ளது என்று சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

வரவு – செலவுத் திட்டங்களில் பெரும்பாலானவை சிறிய அல்லது எந்த முன்னேற்றத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய வரவு – செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட முக்கிய நலன்புரி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும், அதற்கு பதிலாக ‘மீறிய வாக்குறுதிகளின் புதிய சுழற்சியை உருவாக்கியுள்ளது’ என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இசைவின் கீழ் செயல்படுவதாக கூறிய அவர்; அதிக வரி வசூல் மற்றும் வருவாய் இலக்குகளை மீறிய போதிலும், சாதாரண குடிமக்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் சுமையை எதிர்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். அதே நேரத்தில் தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


