
மன்னார் மக்களின் அனுமதியின்றி காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னாரில் மூன்று காற்றாலை திட்டங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள திட்டத் திட்டத்தின்படி, அதிக காற்றாலை மின் திறன் கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கூறிய திட்டங்களில் ஒன்றான தம்பபவனி காற்றாலை மின் நிலையத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகள் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. விண்ட்ஸ்கேப் மன்னார் (பிரைவேட்) லிமிடெட், 20 மெகாவோட் காற்றாலை திட்டம் மற்றும் ஹேலிஸ் ஃபென்டன்ஸ், 50 மெகாவாட் காற்றாலை திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் முறையே டிசம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2026 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களால் எழுந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எழுப்பிலுள்ள எதிப்புக்களை அடுத்து, மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி – காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்த பிறகு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


