தலைப்புச் செய்திகள்

கெஹலிய குடும்பத்தினரின் ரிட் மனுக்கள் தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களை மதிப்பாய்வு செய்த பின்னர், நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு – அந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.