தலைப்புச் செய்திகள்

நீதவான்கள், நீதிபதிகள் உட்பட நீதிச் சேவையிலிருந்து 20 பேர் பணி நீக்கம்

நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட இருபது அதிகாரிகளை நீதிதச் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் மேல் நீதிமன்ற நீதிபதியொருவர், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் அடங்குவர் என, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

இருபது நபர்களில், ஏழு பேரின் சேவைகள் முற்றிலுமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.

நீதித்துறை அதிகாரிகள் சிலருக்கு எதிராகக் கிடைத்டத பொது புகார்கள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து – நீதிச் சேவை ஆணைக்குழு இந்த நடவடிக்கைகளை எடுத்ததுள்ளது.

ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் மீது, முறையாக குற்றம் சாட்டப்பட்டு ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, தவறான நடத்தைக்கு ஆளான நபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா முன் விசாரணையை எதிர்கொள்கிறார் என்று மேலும், லங்காதீப வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஓய்வு பெறும் வயதை நெருங்கும் நிலையில், குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை ஆணைக்குழு வழங்கியுள்ளது.