தலைப்புச் செய்திகள்

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்: பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவின் பணிகளை நீதிச் சேவை ஆணைக்குழு நேற்று (30) முதல் இடைநிறுத்தியுள்ளது. பொலிஸ் மா அதிபர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மஞ்சுள ரத்நாயக்கவின் பல வழக்குத் தீர்ப்புகள் தொடர்பாக – பிரதம நீதியரசரிடம் பொலிஸ் மா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, நீதிச் சேவை ஆணைக்குழு நடத்திய விசாரணையின் பின்னர் இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற பயணத் தடைகளை நீக்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகளின் ஒரு பகுதியாக சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களை விடுவித்தல் தொடர்பானதாகக் கூறப்படும் தவறான நடத்தைகள் குறித்து – இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றிய மஞ்சுள ரத்நாயக்க, வெல்லவாயவுக்கு மாற்றப்பட்டார்.