
குச்சவெளி பிரதேச சபையின் ஏ.பி. முபாரக் (வயத 50), மற்றும் அவருடைய தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷாத் (வயது 34) ஆகியோரை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 500,000 ரூபாa லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், குச்சவெளியில் உள்ள இக்பால் நகர் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிரதேச சபைத் தவிசாளர் முபாறக், முன்னர் 20 பேர்ச் நிலத்தை உள்ளடக்கிய அனுமதிப்பத்திரத்திற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 160,000 ரூபாயை பெற்றதாகவும், பின்னர் மீதமுள்ள காணிப் பகுதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்க கூடுதலாக 500,000 ரூபாயைக் கோரியதாகவும் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 05 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டபோது, அவர்களை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைத செய்தனர். பின்னர் மேலதிக விசாரணைக்காக நிலாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதேச சபைத் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் சார்பானவராவார். குச்சவெளி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரசும், இலங்கை தமிழரசுக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன.


