தலைப்புச் செய்திகள்

மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

மூன்று வயது குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக ஒரு நபரொருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளி 46 வயதுடைய நபராவார். அந்த தனது உறவினரின் குழந்தையை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தமை உறுதியானதையடுத், 12 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிப்பதாக நீதவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, சந்தேக நபருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சைக்கிளில் வைத்து ஓட்டுவதாக கூறி குழந்தையை அழைத்த குற்றவாளி, கிணற்றுக்கு அருகில் குழந்தையைக் கொண்டு சென்று – பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும், இதைனை பெற்றோரிடம் கூறினார் கொலை செய்து விடுவேன் என்றும் குழந்தையை மிரட்டியுள்ளார்.