
கசினோ எனும் சூதாட்டத்தில் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்த இலங்கை நபரொருவர், உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுவா எனும் கொழும்பின் புதிய சொகுசு ஹோட்டலில், 45 வயதான கண்டியைச் சேர்ந்த நபரொருவர் இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
‘சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்’ எனும் கசினோவில் – சூதாடி, இவர் பெருந்தொகைப் பணத்தை இழந்த பின்னர், மேற்குறிப்பிட்ட சொகுசு ஹோட்டலுக்கு வந்து, அங்கு குளியலறை ஆடையின் பட்டியைக் கொண்டு – தூக்கிட்டு இறந்துள்ளார்.
அவர் இறப்பதற்கு முன்னர் ‘ஜோன் கீல்ஸ்-மெல்கோ கேமிங்’ செயற்பாடுகளை குறை கூறி – ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

‘ஜோன் கீல்ஸ்-மெல்கோ கேமிங்’ (John Keells–Melco Gaming) என்பது கொழும்பிலுள்ள ‘சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்’ (City of Dreams Sri Lanka) என்ற ஒருங்கிணைந்த சுற்றுலா வளாகத்தில் சூதாட்ட (கேமிங்) செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு வணிகப் பங்குதாரராகும்.


