
– நூருல் ஹுதா உமர் –
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதன் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் எனும் அடைவைப் பெற்றுள்ளார் என, பல்கலைக்கழக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்திரவியல் பொறியியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் முஸாதிக், உள்ளூர் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட பல்தரப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள், சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் அவரின் கல்வி சார் பயணத்தை சிறப்பாக மாற்றியுள்ளன எனவும் பல்கலைக்கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைவது இதுவே முதல்முறையாகும். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஓர் அடைவு” எனவும் கூறப்படுகிறது.
2024 நொவம்பர் 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் – சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார்.


