தலைப்புச் செய்திகள்

கெஹல்பத்திரவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எஸ்.ஐ சிக்கினார்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகத் தலைவன் ‘கெஹெல்பத்தர பத்மே’ உடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார் எனும் குற்றசாட்டின் பேரில், உதவிப் பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

கைதான உதவிப் பொலிஸ் பரிசோதகர் கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுகிறார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் வைத்து அண்மையில் கெஹல்பத்திர பத்மே உள்ளிட்ட கும்பல் கைதான நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நான்கு குற்றக் கும்பல் உறுப்பினர்கள் சமீபத்தில் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் CID விசாரணை நடத்தி வருகிறது.

அந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துணை ஆய்வாளர் அடையாளம் காணப்பட்டு பின்னர் காவலில் எடுக்கப்பட்டார்.