
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – கொழும்பில் அவருக்கு வழங்கப்பட்ட கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் அமைந்திருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் விதவை மனைவியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த – விசேட சலுகைகளை ரத்து செய்யும், ‘ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமூலம்’ நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கான உத்தியோகபூர்வ வீட்டை காலி செய்தார்.

தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு – மஹிந்த ராஜபக்ஷ வெளியேறுவதற்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்று மஹிந்தவை சந்தித்தார்.



