தலைப்புச் செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்தஉத்தியோகபூர்வ வீட்டை காலி செய்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டமையை அடுத்து, அவர் இவ்வாறு தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் விதவை மனைவியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டமையை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி தனது இல்லத்தை காலி செய்துள்ளார்.

குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்ட உடனேயே, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன – அதில் கையெழுத்திட்டார். இதனையடுத்து அது உடனடியாக அமலுக்கு வந்தது.

தொடர்பான செய்தி: ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேறியது: சாமர மட்டும் எதிர்ப்பு