
நேபாளத்தில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் இன்று (08) ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஊழலுக்கும், சமூக ஊடகங்கள் மீதான அரசாங்கதின் தடைக்கும் எதிராக இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடிய போது, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
நேபாளத்தில் கடந்த வாரம் பேஸ்புக் உட்பட பல சமூக ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து பொலிஸாரை எதிர்கொண்டதை தொடர்ந்து தலைநகர் – காத்மாண்டுவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஊழல் குறித்து இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியின் விளைவாக – இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



