தலைப்புச் செய்திகள்

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது.

நபர் ஒருவரை தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா, அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, நிமல் லான்சாவை – தலா இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும்அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.