தலைப்புச் செய்திகள்

இஷாரா செவ்வந்தி நாட்டிலில்லை: கெஹல்பத்தர பத்மே கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலம்

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு, உடந்தையாக இருந்ததார் எனக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி என்பவர், நாட்டை விட்டு தப்பிச் சென்றதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்திர பத்மே உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து – இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்தக் கைதுகள் நடந்தன.

கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த மற்றும் பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது – பங்கரவாத தடைச் சட்டத்தன் கீழ், 72 மணி நேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.

தொடர்பான செய்தி: செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்