
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால், வழக்கு விசாரணையின் போது கொழும்பு சூம் வழியாக ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தன்னுடைய மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வொன்றுக்கு வெளிநாடு செல்வதற்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


