தலைப்புச் செய்திகள்

ஹிரு செய்தி தொடர்பில் சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்

ஹிரு ஊடக நிறுவனம் – பிரதமர் தொடர்பில் வெளியிட்ட தவறான செய்தி அறிக்கை குறித்து பொலிஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்ததாகக் கூறும் செய்தி குறித்து விசாரிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசி்கவை, பிரதமர் ஹரினி அமரசூரிய பார்ப்பதற்காக சென்றிருந்தார் என்று ஹிரு செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, இந்தச் செய்தி தவறானது என்று கூறி பிரதமர் அலுவலகம் நிராகரித்ததுடன், அந்தச் செய்தியை சரி செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

தொடர்பான செய்தி: ‘முற்றிலும் தவறானது’: ஹிரு செய்திக்கு, பிரதமர் அலுவலகம் மறுப்பு