தலைப்புச் செய்திகள்

“ஆபத்து”: ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு சமம் என்று – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் தாக்கங்கள் ஒரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு அப்பால் நீண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து, அறிக்யொன்றின் மூலம் தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள் சந்திரிக்கா, இது இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்து என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு சமம் என்றும், அதன் தாக்கங்கள் ஒரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு அப்பால் நீண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களும் அத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.