
இஸ்ரேலிய படைகள் இன்று (17) காஸா முழுவதும் நடத்திய தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
காஸா முழுவதும் இஸ்ரேல் நடத்திய இன்று அதிகாலை முதல் நடத்திய தாக்குதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களை ஆதாரமாகக் குறிப்பிட்டு, அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் உதவி கோரி வந்தவர்கள் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் இஸ்ரேல் வலிந்து திணித்துள்ள பட்டினியால் மேலும் 11 பேர் இறந்துள்ளதாக பாலஸ்தீன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பட்டினியால் இந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 108 குழந்தைகளும் அடங்குவர்.

இது இவ்வாறிருக்க, காசாவில் 44,000 அநாதை குழந்தைகளும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும் உள அதிர்ச்சியால் (psychological trauma) பாதிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் அல் ஜெசீராவிடம் கூறியுள்ளார்.
இதேவேளை சுமார் 52 சதவீத மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும், இரத்தப் பைகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



