கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது

🕔 February 23, 2016
Basil - 976ன்னைக் கைது செய்யப்படுவதனை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள் தொடர்பில், நிதி மோசடி விசாரணப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்க, இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினை பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்க்படுகிறது.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமயிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள், இந்த மனு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளது.

நீதியசரர்களான நிஹால் குணரட்ன மற்றும் கே.ரீ. சந்திரசிறி ஆகியோர் ஏனைய நீதியரசர்களாவர்.

நிதி மோசடி தொடர்பில் நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து மனுக்கள் தொடர்பில், நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பசில் ராஜபக்ஷ மனுவொன்றின் மூலம் கோரியிருந்தார்.

பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்ட பத்து பேர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்