தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு
நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறினார்.
நாட்டிலுள்ள தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரியங்கள் எவற்றினையும் ஆற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறானதொரு நிலையில், பிக்குகள்தான் நாட்டை வழி நடத்துகின்றனர் என்று அவர் கூறினார்.
பிக்குகளும் அமைதியானால் இனம், கலாசாரம் மற்றும் நாடு ஆகியவை இல்லாமல் போய் விடும் என்றும் அவர் தெரிவித்தார்.