உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

🕔 February 23, 2016

Saudi - Flagலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது.

சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், சஊதி அரேபியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சவுதி அரேபியா கடந்த ஆண்டில் இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 46ஆயிரத்து 415 கோடி ரூபாய்க்குஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது.

இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் அவுஸ்ரேலியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், சீனா, வியட்நாம், கிரீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்