தலைப்புச் செய்திகள்

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை, ஜனாதிபதி பரிந்துரைத்தார்

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

அரசியலமைப்பு சபையின் அங்கிகாரத்துக்காரம் இந்தப் பரிந்துரைக்கு கிடைக்க வேண்டியுள்ளது. நாளை புதன்கிழமை (23) அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

தற்போதைய தலைமை நீதியரசர் முர்து பெனாண்டோ ஜூலை 27 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார். ஜூலை 25 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் முறையான பிரியாவிடை உரையாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான நீதியரசர் சூரசேன, முன்னர் நீதித்துறை சேவை ஆணைக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

நீதியரசர் சூரசேன – கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் (பி.எஸ்.சி) இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 1985 இல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1989 இல் சட்டத்தரணியானார். 2007 இல் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், 2016 இல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்,