
நாட்டில் இன்னமும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த சபைகள் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது..
தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே இதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையால், புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச சபையை இன்னும் அமைக்க முடியவில்லை.
18 ஆசனங்களைக் கொண்ட வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 06 எனும் அதிகப்படியான உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
சில சபைகளுக்கு உறுப்பினர்கள் வேண்டுமென்றே வருகை தருவதை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 மே 06 ஆம் திகதியன்று, 337 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.



