ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு

🕔 February 21, 2016

Ranil - 032முலீட்டு வலயம் ஒன்றினை அமைக்கும் பொருட்டு, ஹம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் காணிகளை சீனா கோரியுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, அதிகமான சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வந்தாகவும் அவர் கூறினார்.

கப்பல்களை நிர்மாணிக்கும் திட்டமொன்றினை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்று ஆர்வமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள், சீன நிறுவனங்களின் முதலீட்டுக்காக வழங்கப்பட்டுள்ளமையினையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனால், இலங்கை பல நல்ல முதலீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்