தலைப்புச் செய்திகள்

“யுத்த நிறுத்தம் ஆரம்பித்துள்ளது”: இஸ்ரேலை இன்று காலை தாக்கிய பிறகு ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த பின்னரும், ஈரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் இன்று காலை தாக்குதல்களை நடத்தியது. இதில், இஸ்ரேலின் பீர்ஷெபாவில் நடந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என, இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன.

இது இவ்வாறிருக்க, இஸ்ரேலும் ஈரானும் சமாதானத்திற்காக ‘கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்’ தன்னிடம் வந்ததாகவும், ‘நீதி மற்றும் உண்மை’ என்ற பாதையில் இருந்து விலகிச் சென்றால் இரு நாடுகளும் இழக்க நிறைய இருக்கிறது என்றும், யுத்த நிறுத்தம் பற்றி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.