தலைப்புச் செய்திகள்

ஈரானின் ‘செபா வங்கி’ மீது சைபர் தாக்குதல்: முழு தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டதாக ஹேங்கிங் குழு தெரிவிப்பு

ஈரானின் செபா வங்கியின் (Bank Sepah) சில சேவைகள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு சார்ந்த FARS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் ‘பேங்க் செபா’ பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நடந்துள்ள சைபர் தாக்குதலால் எரிபொருள் நிலையங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று FARS செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனாலும் “அடுத்த சில மணி நேரங்களுக்குள்” பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என, அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கிங் அமைப்பு, “பேங்க் செபாவின் அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டதாக” கூறி, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

குறித்த வங்கி இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினால் பயன்படுத்தப்படுவதாகவும், சர்வதேசத் தடைகளைத் தாண்டி, ஈரான் மக்களின் பணத்தை – பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் ராணுவ அணுசக்தித் திட்டத்திற்கு நிதியளிக்கவும், ஆட்சியாளர்களால் இந்த நிறுவனம் பயன்படுத்தப்படுவதாகவும் – ஹேக் செய்துள்ள கோன்ஜெஷ்கே டாரண்டே அல்லது பிரிடேட்டரி ஸ்பாரோ என்று அழைக்கப்படும் குழு தெரிவித்துள்ளது.

1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செபா வங்கி, ஈரானின் முதலாவது வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.