தலைப்புச் செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

பண்டாரவளை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்சலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

​மேயர் பதவிக்காக இன்று (11) நடைபெற்ற வாக்கெடுப்பில், 04 மேலதிக வாக்குகளால் அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதேநேரத்தில் சுயேச்சை குழு1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது. 

அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இரு சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளன.