தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

சிறைச்சாலைகள்ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய – குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட நிலையில், இந்தக் கைது நடந்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படாத கைதி ஒருவரை, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்து சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், துஷார உபுல்தெனியவை பணிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்த பின்னர், இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே, அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி