
புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கை தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நியமனங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.
மேலும், இதே நிகழ்வில் 79 சிறப்பு தர தாதியர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார். மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




