
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைமை விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை இன்று (23) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில், அம்பிட்டியே தேரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உஹன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின்ட குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸ் நிலையத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பொலிஸாரை தேரர் மிக மோசமாக திட்டும் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேரர் பல முறை இவ்வாறு அரச அலுவலகங்களிலும், அரச அதிகாரிகளுடனும் மோசமாக நடந்துள்ளமை தொடர்பான வீடியோகள் வெளியாகியுள்ளமையும் நினைவு கொள்ளத்தக்கது.



