தலைப்புச் செய்திகள்

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்களிப்பு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பின் போது, தவறான நடத்தையாகக் கருதப்பவை குறித்து – தேர்தல் ஆணைக்குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது மது அருந்திவிட்டு வாக்குச் சாவடிக்குள் நுழைதல் ஆகியவை தவறான நடத்தையாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.