
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரை மொத்தம் 1,267 புகார்கள் கிடைத்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் 24 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது 20 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக 06 நபர்களில் ஒரு பாடசாலை அதிபர், தொழில் அமைச்சில் கடமையாற்றும் ஒரு அதிகாரி, ஒரு கள அதிகாரி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
மேலும், ஒரு பொது சுகாதார பரிசோதகர், ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதியமைச்சின் ஒரு ஊழியர், மாகாண வருவாய்த் துறையின் மதிப்பீட்டாளர்களுடன், 06 பொதுமக்களும் சோதனைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 24 நபர்களுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.



