தலைப்புச் செய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, கிளப் வசந்த கொலை சந்தேக நபர் ‘லொகு பட்டி’யின் குற்ற விவரங்கள் வெளியாயின

‘கிளப் வசந்த’ மற்றும் இன்னொரு நபரின் இரண்டு கொலைக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சந்தேக நபர் ‘லொகு பட்டி’ எனப்படும் லத்துவஹந்தி சுஜீவ ருவன் குமார சில்வா இன்று (04) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவர் புரிந்த குற்றங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 08, 2024 அன்று அதுருகிரிய பொலிஸ் பிரிவில் ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றொரு நபரின் இரட்டைக் கொலைக்குப் பின்னணியில் லொகு பட்டி இருந்துள்ளார்.

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால், இலங்கை பொலிஸார், இன்டர்போலுடன் இணைந்து, அவர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த வகையில் பல கடுமையான குற்றங்களுக்காகத் தேடப்படும் மேற்பட லொகு பட்டி எனப்படும் சந்தேக நபர், சமீபத்தில் பெலாரஸில் அந்த நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளில் அவர் வெளிநாட்டிலிருந்து குற்றங்களை ஒருங்கிணைத்ததாக தெரியவந்துள்ளது.

அவர் தொடர்பு பட்ட குற்றங்கள் வருமாறு:

  • 23 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை. இது தொடர்பான வழக்கு விசாரணை களுத்துறை மேல் நீதிமன்றத்தில் (2016.05.21) வழக்கு உள்ளது.
  • துப்பாக்கிச் சூடு மற்றும் கடுமையான காயம் தொடர்பான சம்பவத்தில் ஈடுபட்டமை. கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. (2017.05.09).
  • 299 கிராம் ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை. களுத்துறை மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை (2017.06.15).
  • வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக் குண்டு, ரிவோல்வர் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தமை. மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை (2021.10.08).

நடந்து வரும் ஏனைய வழக்குகள் பின்வருமாறு:

  • ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்தியமை (2022.08.24, அஹுங்கல்ல).
  • ஒருவரைச் சுட்டுக் கொன்றமை (2022.09.23, அஹுங்கல்ல).
  • T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி கொலை செய்தமை (2022.10.12, அஹுங்கல்ல).
  • மீன் வியாபாரி ஒருவரைக் கொலை செய்யச் செல்லும் வழியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டமை (2024.01.18, அம்பலாங்கொட).
  • T-56 துப்பாக்கியால் இரண்டு கொலைகளைச் செய்தமை, நான்கு பேரைக் காயப்படுத்தியமை (2024.07.08, அதுருகிரிய).

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விரிவான விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்படுவார்.