
இலங்கையும் வியட்நாமும் ஒரு ஒப்பந்தத்திலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் மற்றும் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் – இவை கையெழுத்திடப்பட்டன.
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒப்பந்தமும் கையெழுத்தானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



