தலைப்புச் செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான தீர்ப்பின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக – ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மனுக்கள் மற்றும் தீர்ப்புகளின் நகல்களை தமக்கு வழங்குமாறு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.

மனுக்கள் மற்றும் தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்குமாறும் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்காதமை, முறையாக உறுதிமொழி எடுக்காமை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே சமர்ப்பித்ததன் அடிப்படையில் பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறு நிராகரிக்கப்பட்ட 90 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று தடவைகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.