
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று – வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ஜெட் விமானம் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இந்த விமானம், பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ராடர் தொடர்பை இழந்துள்ளது. பின்னர் வாரியபொலவின் மினுவன்கெட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதிலும் இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி, பாராசூட் மூலம் கீழே இறங்கியுள்ளனர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். அதேவேளை விமானம் தீப்பிடித்துள்ளது.



