தலைப்புச் செய்திகள்

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதமான அதிகரிக்கப்படும் என்று இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று (18) அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு ஏப்ரல் 01, 2025 முதல் அமுலுக்கு வரும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும். அதன் புதிய விலை 1100 ரூபாய் ஆகும்.