தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான காலக்கெடுக்கள் நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான முக்கிய காலக்கெடுக்களை நீடிப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர் மார்ச் 12 ஆம் திகதி இதற்கான காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, தேர்தல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு மார்ச் 19 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி மார்ச் 19ஆம் திகதி வரை – தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இறுதி தினமான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஆட்சேபனைகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை மதிப்பாய்வு செய்த பின்னரே, தேர்தல் திகதியை ஆணைக்குழு அறிவிக்கும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 35 நாட்களுக்குள்ளும், அதிகபட்சமாக 49 நாட்களுக்குள்ளும் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.