தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள நாய்களை அப்புறப்படுத்துமாறு சபாநாயகர் உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்துமாறு நாடாளுமன்றத்தின் சேவிதர் குஷான் ஜெயரத்னவுக்கு சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்ற கட்டடங்களை பரிசோதித்த போது, நாயொன்று அவருக்கு மிக அருகில் சென்றதைத் அடுத்து – இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இங்கு நாய்கள் வளர்க்கப்படுகின்றனவா?” என்று, அதன்போது – சபாநாயகர் கேட்டதாக, ‘லங்காதீப’ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் தற்போது கிட்டத்தட்ட 10 நாய்கள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.