சாக் விளையாட்டுப் போட்டி; பெரிய நாடுகளைப் பின்தள்ளி விட்டு, 02ஆம் இடத்தை வென்றது இலங்கை

🕔 February 17, 2016

SAG logo - 01தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ‘சாக்’ விளையாட்டுப் போட்டி இறுதி முடிவின் பிரகாரம், சனத்தொகைகள் அதிகம் கொண்ட பெரிய நாடுகளை பின் தள்ளி விட்டு, இலங்கை இரண்டாம் இடத்தை வெற்றி கொண்டுள்ளது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஆரம்பமான 12 ஆவது சாக் விளையாட்டு போட்டி நேற்று 16 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.

இதனடிப்படையில் இறுதி முடிவின் பிரகாரம் 308 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அவற்றில் 188 தங்கங்களும், 90 வெள்ளிகளும் 30 வெண்கலங்களும் அடங்குகின்றன.

இதேவேளை, இலங்கை 186 பதக்கங்களைப் பெற்று இரண்டாமித்தை வெற்றி கொண்டுள்ளது. இவற்றில் 25 தங்கங்களும், 63 வெள்ளிகளும், 98 வெண்கலங்களும் உள்ளடங்குகின்றன.

நாடுகள் பெற்ற பதக்களின் முழுமையான விபரம் வருமாறு:SAG Medals - 09

Comments

புதிது பேஸ்புக் பக்கம்