தலைப்புச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவுகளை இன்று பெறலாம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (13) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சலுகைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மொத்தம் 1,725,795 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக12 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, பயனாளிகள் இன்று முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து தங்கள் நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று நலன்புரி சலுகைகள் சபை தெரிவித்துள்ளது.

இதையும் பாருங்கள்