
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் இன்று (06) முதல் திறந்திருக்கும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நெல் அறுவடை நடைபெற்று வரும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் – அரசாங்கத்தின் நெல் களஞ்சியங்கள் திறக்கப்படும் என்று, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த கூறியுள்ளார்.
நெல் கொள்முதல் செய்வதற்காக திறைசேரி 05 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபை – நெல் கொள்முதல் செய்யும் விலைகளை நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி, நாடு நெல் கிலோகிராம் 120 ரூபாய், சம்பா நெல் கிலோகிராம் 125 ரூபாய், கீரி சம்பா நெல் கிலோகிராம் 132 ரூபாய்.
இதையும் பாருங்கள்



