தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.