
காஸாவினல் இஸ்ரேல் நடத்திய 15 மாதப் போரில், ஒவ்வொரு நாளும் சுமார் 35 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கம், ஹமாஸுடனான காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, காஸா பகுதியில் அதன் முழுப் பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக, பாலஸ்தீன அதிகார சபை அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 33 குழந்தைகள் உட்பட குறைந்தது 122 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 7, 2023 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திய இன அழிப்பு நடவடிக்கைகளில், குறைந்தது 46,899 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 110,725 பேர் காயமடைந்துள்ளனர்.



