
– முகம்மது அக்ரம் –
கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வொன்று அட்டாளைச்சேனை சம்பு நகர் அல் – மினா வித்தியாலத்தில் இன்று (05) இடம்பெற்றது.
அந்த வகையில் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளை மற்றும் Being Kind Foundation ஆகியவற்றின் அனுசரணையில் ‘வெள்ள அனர்த்த பாதிப்பு திட்டத்தின்’ கீழ் – அட்டாளைச்சேனை சம்பு நகர் அல்-மினா வித்தியால 30 மாணவர்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் உப அதிபர் எம்.எச். அப்துல் ஹை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.
றஸ்மி பிரதம அதிதியாகவும், பாடசாலையின் மேம்பாட்டு உத்தியோகத்தரும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான மௌலவி என்.ரி. நஸீர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டப் பணிப்பாளர் நஸீர் காமில், சமூக செயற்பாட்டாளர் எம்.ஆர். ஹாறூன்,Being Kind Foundation பிரதானி ஆர்.எம்.ஏ. அனஸ், கிராம உத்தியோகத்தர் கே.எம்.எம். முபிஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். மனாப்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். பாயிஸ், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அட்டாளைச்சேனை தலைவரும் பிரதியதிபருமான எம்.ஐ. ஹாசீம், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பாலமுனை தலைவர் ஐ.ஏ. ஸிறாஜ், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அட்டாளைச்சேனை கிளை பொருளாளர் ஏ.எம். ஆசிரியர் சுலைமாலெப்பை பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.எல்.எம். அர்சாத் மற்றும் சம்பு நகர் ஜும்ஆப்பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





